/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
20 போன்கள், ரூ.70,000 திருட்டு திருவல்லிக்கேணியில் துணிகரம்
/
20 போன்கள், ரூ.70,000 திருட்டு திருவல்லிக்கேணியில் துணிகரம்
20 போன்கள், ரூ.70,000 திருட்டு திருவல்லிக்கேணியில் துணிகரம்
20 போன்கள், ரூ.70,000 திருட்டு திருவல்லிக்கேணியில் துணிகரம்
ADDED : ஜூலை 01, 2024 01:03 AM
சென்னை:சவுகார்பேட்டையைச் சேர்ந்தவர் சுரேந்தர் பன்சாலி, 43. இவர், திருவல்லிக்கேணி பெரிய தெருவில் கடந்த, 15 ஆண்டுகளாக மொபைல் போன் விற்பனையகம் மற்றும் சர்வீஸ் கடை நடத்தி வருகிறார்.
வழக்கம்போல, நேற்று முன்தினம் இரவு 9:45 மணியளவில், கடையை பூட்டி வீட்டிற்கு சென்றார். இந்த நிலையில், கடைக்கு எதிர் வீட்டில் வசிக்கும் நிர்மல் என்பவர், நேற்று காலை 5:30 மணிக்கு வெளியே வந்தபோது, கடை திறந்து இருப்பதை பார்த்துள்ளார்.
சந்தேகமடைந்தவர், உடனே சுரேந்தர் பன்சாலியின் மொபைல் போனில் தொடர்பு கொண்டு சம்பவம் குறித்து கூறியுள்ளார். இதையடுத்து போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
பின், சுரேந்தர் பன்சாலி கடையில் சென்று பார்த்தபோது, கல்லாவில் இருந்த, 70,000 ரூபாய், 3.50 லட்சம் மதிப்பிலான 20 மொபைல் போன்களை மர்மநபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.
கண்காணிப்பு கேமரா காட்சி பதிவுகளை ஆய்வு செய்தபோது, இருசக்கர வாகனத்தில் 'ெஹல்மெட்' அணிந்து வந்த இருவர் பணத்தையும், மொபைல்போனையும் திருடிச் சென்றது தெரியவந்தது.
இது குறித்து ஐஸ்ஹவுஸ் போலீசார் விசாரிக்கின்றனர்.