/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மத்திய அரசு ஊழியரிடம் ரூ.2.23 லட்சம் நுாதன மோசடி
/
மத்திய அரசு ஊழியரிடம் ரூ.2.23 லட்சம் நுாதன மோசடி
ADDED : ஆக 09, 2024 12:27 AM
கொடுங்கையூர்,
மத்திய அரசு ஊழியரிடம், போலி நகைகளை கொடுத்து, 2.23 லட்சம் ரூபாய் மோசடியில் ஈடுபட்ட மர்ம நபர்களை, போலீசார் தேடி வருகின்றனர்.
அப்துல்லா ஜெய்ராம் என்பவர், 36 கிராம் தங்க நகைகளை கொடுங்கையூர், டி.எச்., சாலையிலுள்ள, ஜெய்ராம் சீர்வி அடகு கடையில் அடமானம் வைத்ததாகவும், அதை மீட்க முடியாததால், யாரேனும் பணம் கொடுத்து மீட்டுக் கொள்ளலாம் எனவும், ஆன்லைனில் பதிவிட்டிருந்தார்.
இதை பார்த்த, பெரம்பூர் படேல் நகரைச் சேர்ந்த மத்திய அரசு ஊழியரான சுந்தர கிருஷ்ண யாதவ், 31, என்பவர், தான் அடகு நகைகளை மீட்டுக் கொள்வதாக, அவரிடம் கூறியுள்ளார்.
இதற்காக அப்துல்லா ஜெய்ராமிடம், 2.23 லட்சம் ரூபாய் கொடுத்துள்ளார். அவரும், 36 கிராம் எடையிலான நகைகளை மீட்டு, சுந்தர கிருஷ்ண யாதவிடம் வழங்கியுள்ளார்.
பின், இந்த நகைகளை உருக்க, சவுகார்பேட்டை கொண்டு சென்ற போது, பரிசோதனையில் அவை போலியானவை என தெரிந்தது.
அப்துல்லா ஜெய்ராமை தொடர்பு கொண்ட போது, அவரின் மொபைல் எண் அணைத்து வைக்கப்பட்டிருந்தது.
அதிர்ச்சியடைந்த சுந்தர கிருஷ்ண யாதவ், கொடுங்கையூர் போலீசில் நேற்று புகார் அளித்தார்.
மோசடியில் ஈடுபட்டவர்களை, போலீசார் தேடி வருகின்றனர்.