/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
'தலசீமியா'வால் பாதித்த 25 குழந்தைகளுக்கு எம்.ஜி.எம்.,மில் சிகிச்சை
/
'தலசீமியா'வால் பாதித்த 25 குழந்தைகளுக்கு எம்.ஜி.எம்.,மில் சிகிச்சை
'தலசீமியா'வால் பாதித்த 25 குழந்தைகளுக்கு எம்.ஜி.எம்.,மில் சிகிச்சை
'தலசீமியா'வால் பாதித்த 25 குழந்தைகளுக்கு எம்.ஜி.எம்.,மில் சிகிச்சை
ADDED : ஆக 22, 2024 12:38 AM
சென்னை, தலசீமியாவால் பாதிக்கப்பட்ட, 25 குழந்தைகளுக்கு எம்.ஜி.எம்., ஹெல்த்கேர் மருத்துவமனையில் இலவச சிகிச்சை அளிக்கப்பட உள்ளது.
மருத்துவமனையின் குழந்தைகளுக்கான ரத்தவியல், புற்றுநோயியல் துறை தலைவர் தீனதயாளன் கூறியதாவது:
எம்.ஜி.எம்., ஹெல்த்கேர் மருத்துவமனை, 'அநாமயா' திட்டத்தின் வாயிலாக தமிழகம், ஆந்திரா மாநிலங்களில் பழங்குடியின குழந்தைகளிடம் பரிசோதனை செய்யப்பட்டது. 5,000 குழந்தைகளுக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில், 25 குழந்தைகள் தலசீமியாவால் பாதிக்கப்பட்டது கண்டறியப்பட்டது. இக்குழந்தைகளுக்கு 'சப்தா' அறக்கட்டளை, அரசு நிதியுதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட உள்ளது.
தமிழகம், ஆந்திராவில் 10,000க்கும் மேற்பட்டோர் தலசீமியாவால் பாதிக்கப்பட்டுள்ளர். சிகிச்சை அளிக்காவிட்டால், வாழ்நாள் குறைந்துவிடும். சிகிச்சை பெறாத பெரும்பாலான குழந்தைகள், 15 வயதை கடந்து உயிர் வாழ்வதில்லை. இதற்கு, எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சையின் வாயிலாக தீர்வு அளிக்க முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.