ADDED : மார் 13, 2025 12:07 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெரம்பூர்,வடசென்னையில் பெரம்பூர், திரு.வி.க., நகர் சுற்றுவட்டாரப் பகுதிகளில், மாவா, குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்கள் விற்பனையை தடுக்கும் வகையில், தனிப்படை போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.
நேற்று, பெரம்பூர் மருத்துவமனை சாலையில் குட்கா விற்கப்படுவதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, வடக்கு மண்டல இணை கமிஷனரின் தனிப்படை போலீசார் நடத்திய சோதனையில், உதயகுமார், 42, என்பவரை போலீசார் கைது செய்தனர்.
அவரது வீட்டில், 25 கிலோ போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்டுள்ள உதயகுமார் மீது, ஏற்கனவே நான்கு வழக்குகள் நிலுவையில் உள்ளன.