ADDED : மே 24, 2024 12:08 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கொருக்குப்பேட்டை, கொருக்குப்பேட்டை ரயில்வே காவல் ஆய்வாளர் சசிகலா, தலைமை காவலர் ராஜாமணி, காவலர் சுப்பிரமணியபாரதி ஆகியோர் அடங்கிய குழு, நேற்று மதியம், தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, கொருக்குப்பேட்டை, ரயில் நிலையம் 4வது நடைமேடையில், கேட்பாரின்றி, 10 மூட்டைகளில் 25 கிலோ வீதம், 250 கிலோ ரேஷன் அரிசி கிடந்தது. அவற்றை பறிமுதல் செய்து, பட்டரவாக்கம் உணவுப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.