/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
செங்கல்பட்டில் ரூ.13 கோடி கபளீகரம் 4 ஆண்டுகளில் 253 சைபர் வழக்கு பதிவு
/
செங்கல்பட்டில் ரூ.13 கோடி கபளீகரம் 4 ஆண்டுகளில் 253 சைபர் வழக்கு பதிவு
செங்கல்பட்டில் ரூ.13 கோடி கபளீகரம் 4 ஆண்டுகளில் 253 சைபர் வழக்கு பதிவு
செங்கல்பட்டில் ரூ.13 கோடி கபளீகரம் 4 ஆண்டுகளில் 253 சைபர் வழக்கு பதிவு
ADDED : மே 29, 2024 12:18 AM
செங்கல்பட்டு, செங்கல்பட்டு மாவட்டத்தில், நான்கு ஆண்டுகளில், ஆன்லைன் மோசடியில் பணத்தை இழந்ததாக, 'சைபர் கிரைம்' போலீசில், 253 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
செங்கல்பட்டு மாவட்ட காவல் அலுவலகத்தில், சைபர் கிரைம் குற்றப்பிரிவு, 2021ம் ஆண்டு முதல் இயங்கி வருகிறது. தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக, நகர்ப்புறங்களில் வசிக்கும் பெரும்பாலானோர், டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையில் ஈடுபடுகின்றனர். இதை பயன்படுத்தி, அவர்களின் வங்கி கணக்கிலிருந்து மோசடி கும்பல் ஏமாற்றியும், ஆசை வார்த்தை கூறியும், மிரட்டியும், பணம் கையாடல் செய்கின்றனர்.
செங்கல்பட்டு மாவட்டத்தில், கடந்த நான்கு ஆண்டுகளில் இது தொடர்பான புகார்களின் அடிப்படையில், சைபர் கிரைம் போலீசார் 253 வழக்குகள் பதிவு செய்துள்ளனர். அந்த வழக்குகளில், 13.16 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
தொடர்ந்து சைபர் கிரைம் குற்றவாளிகளை கண்டுபிடித்து, பாதிக்கப்பட்டவர்கள் இழந்த பணத்தை மீட்டு அவர்களிடம் ஒப்படைத்து வருகின்றனர்.
தற்போது வரை 93.28 லட்சம் ரூபாய் மீட்கப்பட்டு உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
பணத்தை மீட்டாலும், போலீசாரிடம் சிக்காமல் உள்ள சைபர் கிரைம் குற்றவாளிகளை பிடிக்கும் பணியில், தனிப்படை போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். ஆன்லைன் மோசடி வாயிலாக பாதிக்கப்பட்டால் www.cybercrime.gov.in என்ற வலைதளத்தை பயன்படுத்தி, புகார்களை பதிவிடலாம்; 1930 என்ற இலவச தொலைபேசி எண்ணை உடனடியாக தொடர்பு கொள்ளலாம் என, செங்கல்பட்டு மாவட்ட சைபர் கிரைம் தடுப்பு போலீசார் தெரிவித்துள்ளனர்.