/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
'ஆன்லைன்' மோசடி 4 பெண்களிடம் 2.60 லட்சம் 'ஆட்டை'
/
'ஆன்லைன்' மோசடி 4 பெண்களிடம் 2.60 லட்சம் 'ஆட்டை'
ADDED : ஆக 05, 2024 12:58 AM
சென்னை, ராமாபுரத்தைச் சேர்ந்தவர் சத்திய சீலா, 32; மென்பொருள் பொறியாளர். இவரது மொபைல் போனில் தொடர்பு கொண்ட மர்ம நபர், மின் வாரியத்தில் இருந்து பேசுவதாக தெரிவித்துள்ளார்.
மின் கட்டணம் செலுத்தவில்லை என்றால் இணைப்பை துண்டித்து விடுவதாகவும் தாங்கள் அனுப்பும் 'லிங்க்'கை பயன்படுத்தி, உடனடியாக பணத்தை கட்டுமாறு கூறியுள்ளார்.
சத்திய சீலா அந்த 'லிங்க்'கை பயன்படுத்தி பணப்பட்டுவாடா செல்ல முயன்றதும், அவரது வங்கி கணக்கில் இருந்து மூன்று முறையாக 1 லட்சம் ரூபாய் எடுக்கப்பட்டதாக குறுந்தகவல் வந்தது.
l அதே பகுதியைச் சேர்ந்த ஜமுனா ராணி என்பவரிடம் வங்கி அதிகாரிகள் பேசுவதாக கூறி 'கிரெடிட் கார்டு'க்கு சிறப்பு பரிசு கிடைத்து இருப்பதாக கூறி, அவரது கிரெடிட் கார்டில் இருந்து 75,000 ரூபாயும், ராமாபுரத்தை சேர்ந்த கவுசல்யா என்பவரை தொடர்பு கொண்டு வேலைவாய்ப்பு இருப்பதாக கூறி, 6,000 ரூபாயும், அரும்பாக்கத்தைச் சேர்ந்த கவிதா என்பவரிடம் 40,000 ரூபாயும் மர்ம நபர்கள் 'ஆட்டை' போட்டுள்ளனர். அதேபோல, வளசரவாக்கத்தைச் சேர்ந்த அரிகரன் என்பவரிடம் 45,000 ரூபாயும் மர்ம நபர்கள் சுருட்டி உள்ளனர்.
இது குறித்த புகாரையடுத்து போலீசார் விசாரிக்கின்றனர்.