3 பேர் கும்பலால் வெட்டப்பட்ட தி.மு.க., நிர்வாகி உயிரிழப்பு
3 பேர் கும்பலால் வெட்டப்பட்ட தி.மு.க., நிர்வாகி உயிரிழப்பு
UPDATED : ஆக 17, 2026 10:22 PM
ADDED : ஆக 17, 2026 10:02 PM
தண்டையார்பேட்டை:மூன்று பேர் கும்பலால் வெட்டப்பட்ட, தி.மு.க., நிர்வாகி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்
தண்டையார்பேட்டை, நேதாஜி நகர், 2வது தெருவைச் சேர்ந்தவர் ராஜா, 45; தி.மு.க., 38வது வட்ட துணை செயலர்.
ஜூலை, 13ம் தேதி, வீட்டின் வெளியே நின்று நண்பருடன் பேசிக் கொண்டிருந்தார். அங்கு வந்த மூன்று பேர் கும்பல், அவரை ஓட ஓட விரட்டி, கத்தியால் சரமாரியாக வெட்டி தப்பியது.
இதில், படுகாயமடைந்த ராஜா ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். வழக்கு பதிவு செய்த ஆர்.கே.நகர் போலீசார், தி.மு.க., பிரமுகரை வெட்டிய, அதே பகுதியைச் சேர்ந்த கணேசன், 44, ரஞ்சித், 33, அபினேஷ், 19, ஆகிய மூவரையும் கைது செய்தனர்.
இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ராஜா, நேற்று உயிரிழந்தார். இதை தொடர்ந்து, ஆர்.கே., நகர் போலீசார் வழக்கை கொலை வழக்காக மாற்றி விசாரிக்கின்றனர்.
