ADDED : மே 09, 2024 12:21 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கண்ணகி நகர், கண்ணகி நகர் அரசு பள்ளி மற்றும் காலி மனைகளில் மறைந்திருந்து, கஞ்சா, போதை மாத்திரை விற்பதாக, பகுதி மக்கள், கண்ணகி நகர் போலீசில் புகார் அளித்தனர்.
தனிப்படை போலீசார் விசாரணையில், பிரகாஷ், 22, சண்முகம், 28, கார்த்திக், 23, என தெரிந்தது. இவர்களை, நேற்று கைது செய்தனர். அதே பகுதியில் உள்ள மொத்த வியாபாரிகளிடம், போதை பொருட்களை வாங்கி, சில்லரை வியாபாரம் செய்வது தெரிந்தது.