/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மூதாட்டியிடம் 3 சவரன் செயின் 'அபேஸ்'
/
மூதாட்டியிடம் 3 சவரன் செயின் 'அபேஸ்'
ADDED : ஜூன் 26, 2024 12:17 AM
குரோம்பேட்டை, குரோம்பேட்டை, நியு காலனி 16வது குறுக்கு தெருவைச் சேர்ந்தவர் சுந்தரி, 63. இவர், வழக்கம்போல குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் வெளிநோயாளியாக சிகிச்சை பெற்று வீடு திரும்பி இருந்தார்.
அப்போது, அங்கிருந்த, 40 வயது மதிக்கத்தக்க மாற்றுத்திறனாளி நபர் ஒருவர், மருத்துவ காப்பீடு அட்டை வாங்கி தருவதாக கூறியுள்ளார். சுந்தரியும் இதை நம்பி, அந்த நபருடன் மீண்டும் மருத்துவமனைக்குள் சென்றார்.
அங்கு சென்றதும், காப்பீடு அட்டை பெற வேண்டும் எனில், 'கழுத்தில் நகை அணிந்திருக்கக்கூடாது' எனக்கூறி, மூதாட்டியின் 3 சவரன் செயினை கழற்றி கையில் வைத்திருந்தார்.
பின், ஒரு விண்ணப்பத்தை கொடுத்து, அதில் கையெழுத்து போடுமாறு கூறியுள்ளார். மூதாட்டி சுந்தரியும், கையெழுத்து போட்டு விட்டு பார்த்தபோது, நகையுடன் அந்த நபர் மாயமானது தெரியவந்தது.
தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த மூதாட்டி, குரோம்பேட்டை போலீசில் புகார் அளித்தார். இப்புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிந்து, நகையுடன் மாயமான மாற்றுத்திறனாளி நபரை தேடி வருகின்றனர்.