sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

வகுப்பறை கூரை இடிந்து 3 மாணவியர் காயம்

/

வகுப்பறை கூரை இடிந்து 3 மாணவியர் காயம்

வகுப்பறை கூரை இடிந்து 3 மாணவியர் காயம்

வகுப்பறை கூரை இடிந்து 3 மாணவியர் காயம்


ADDED : ஆக 09, 2024 12:42 AM

Google News

ADDED : ஆக 09, 2024 12:42 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்போரூர், திருப்போரூர் ஒன்றியம், சிறுதாவூர் கிராமத்தில் துவக்கப்பள்ளியும் உயர்நிலைப்பள்ளியும் ஒரே வளாகத்தில் அமைந்துள்ளன. இதில், 350க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் படிக்கின்றனர்.

பள்ளியின் ஒரு பகுதியில் கட்டடம் சேதமடைந்து பூட்டி வைக்கப்பட்டுள்ளது. மற்ற கட்டடங்களில் வகுப்புகள் நடக்கின்றன.

இந்நிலையில், நேற்று 10ம் வகுப்பறையில், நண்பகல் 1:30 மணிக்கு திடீரென கூரை இடிந்து விழுந்தது.

இதில், வகுப்பறையில் இருந்த மூன்று மாணவியருக்கு தலையில் லேசான காயம் ஏற்பட்டது. அவர்கள், திருப்போரூர் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்றனர்.

கூரை இடிந்து விழுந்த வகுப்பறை கட்டடத்திலிருந்து, அனைத்து மாணவ - மாணவியரும் வெளியேற்றப்பட்டு, வெளிப்புறத்தில் அமரவைக்கப்பட்டனர். கல்வி அதிகாரிகள், போலீசார் உட்பட துறை சார்ந்த அதிகாரிகள் பள்ளியில் விசாரித்தனர்.






      Dinamalar
      Follow us