/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
3,000 போதை மாத்திரை பறிமுதல்; ரவுடி கைது
/
3,000 போதை மாத்திரை பறிமுதல்; ரவுடி கைது
ADDED : மே 29, 2024 12:29 AM

பெரம்பூர், சென்னையில் 'ஆன்லைன்' வாயிலாக போதை மாத்திரை விற்பனை அதிகரித்து வருகிறது.
இதுகுறித்து, செம்பியம் போலீசார் விசாரணையில் இறங்க, பிரபல பழைய குற்றவாளிகள் ஆன்லைனில் போதை மாத்திரைகளை விற்பனை செய்வது தெரிந்தது.
இதையடுத்து, தனிப்படை போலீசார் தேடுதல் வேட்டை நடத்தி, அம்பத்துார் அருகே பிரபல ரவுடி அஜித் என்ற குணாநிதி,24, என்பவரை, நேற்று முன்தினம் கைது செய்தனர்.
அவர் அளித்த தகவலின் அடிப்படையில், திருமுல்லைவாயிலில் உள்ள வீட்டில் சோதனையிட்டு, 3,000 போதை மாத்திரைகளை பறிமுதல் செய்தனர். சங்கர் பாய் என்பவரிடமிருந்து, குணாநிதி போதை மாத்திரைகளை வாங்கியது தெரிந்தது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், குணாநிதியிடம் தொடர்ந்து விசாரிக்கின்றனர்.