/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ரூ.3.62 கோடி ஏமாற்றியவர் சிக்கினார்
/
ரூ.3.62 கோடி ஏமாற்றியவர் சிக்கினார்
ADDED : மே 16, 2024 12:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை,
சென்னை, அண்ணா நகரைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன், 66.
இவரிடம், செங்கல்பட்டு மாவட்டம், ஊரப்பாக்கத்தைச் சேர்ந்த பழனி மற்றும் சத்தியமூர்த்தி உள்ளிட்டோர், செம்மஞ்சேரியில் 3.62 சென்ட் நிலம் ஒன்றை காண்பித்து வாங்கி தருவதாக கூறி, 3.62 கோடி ரூபாயை, வங்கி கணக்கு மூலமாகவும், பணமாகவும் பெற்றுள்ளனர்.
அதன்பின் ஏமாற்றினர். இது குறித்து மத்திய குற்றப்பிரிவு போலீசில் ரவிச்சந்திரன் புகார் அளித்தார்.
பழனியை போலீசார் நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர். சத்தியமூர்த்தியை தேடி வருகின்றனர்.