/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
'இஸ்கான்' சார்பில் 3ம் ஆண்டு ரத யாத்திரை மே 1ல் ரத யாத்திரை 'இஸ்கான்' ஏற்பாடு

ADDED : ஏப் 25, 2024 12:53 AM
திருநின்றவூர், 'இஸ்கான்' எனும் உலக கிருஷ்ண பக்தி இயக்கம் சார்பில், ஆண்டுதோறும் ஜகன்நாத் ரத யாத்திரை நடத்தப்படுகிறது.
அதன்படி, வடசென்னை 'இஸ்கான்' சார்பில், மூன்றாம் ஆண்டு ரத யாத்திரை, மே 1ம் தேதி மாலை 4:00 மணியளவில், திருநின்றவூர் சி.டி.எச்., சாலையில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற உள்ளது.
இந்த ரத யாத்திரை, சி.டி.எச்., சாலையில் துவங்கி திருநின்றவூர் மேம்பாலம், பெரியபாளையம் சாலை, கோமதிபுரம் பிரதான சாலை, கோமதிபுரம் மூன்றாவது குறுக்குத் தெரு வழியாக சென்று, மாலை 6:30 மணிக்கு இஸ்கான் திருநின்றவூரை அடையும்.
ஊர்வல பாதை முழுக்க, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படுகிறது.
மாலை 6:45 மணிக்கு சொற்பொழிவிற்குப் பின், ஸ்ரீல பிரபுபாதர் தியேட்டரின் 'அம்பரீஷ்' நாடகம் நடைபெறும் என இஸ்கான் தெரிவித்துள்ளது.