/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மெத்தம்பெட்டமைன் கடத்திய 4 பேர் கைது
/
மெத்தம்பெட்டமைன் கடத்திய 4 பேர் கைது
ADDED : மார் 09, 2025 01:23 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சைதாப்பேட்டை, சைதாப்பேட்டை ரயில் நிலையம் வழியாக, மெத்தம்பெட்டமைன் என்ற போதை பொருள் கடத்தி வருவதாக, சைதாப்பேட்டை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
நேற்றுமுன்தினம் இரவு, ரயில் நிலைய வாசலில் வைத்து, போலீசார் நான்கு பேரை பிடித்தனர். விசாரணையில், தஞ்சாவூரை சேர்ந்த மகாத்மா, 24, கார்த்திக்குமார், 26, சீனிவாசன், 24, காமராஜ், 32, என தெரிந்தது.
இவர்கள், வடமாநிலங்களில் இருந்து போதை பொருள் கடத்தி வந்து, தமிழகத்தில் விற்று வந்தனர். இவர்களை கைது செய்து போலீசார், 6 கிராம் மெத்தம்பெட்டமைன் போதை பொருளை பறிமுதல் செய்தனர்.