/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஆண் நர்சிடம் நகை பறிப்பு சாலிகிராமத்தில் 4 பேர் கைது
/
ஆண் நர்சிடம் நகை பறிப்பு சாலிகிராமத்தில் 4 பேர் கைது
ஆண் நர்சிடம் நகை பறிப்பு சாலிகிராமத்தில் 4 பேர் கைது
ஆண் நர்சிடம் நகை பறிப்பு சாலிகிராமத்தில் 4 பேர் கைது
ADDED : மார் 13, 2025 12:12 AM
விருகம்பாக்கம், வடபழனி, சோமசுந்தர பாரதியார் நகரைச் சேர்ந்தவர் பிரசாந்த், 27. இவர், வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில், செவிலியராக பணி செய்து வருகிறார்.
திருமணமாகாத பிரசாந்த், ஆண்களுடன் உறவில் இருந்து வந்தார். இவர், நேற்று முன்தினம் மொபைல் போன் செயலி வாயிலாக, ஆண் நண்பரை தொடர்புக் கொண்டு, சாலிகிராமம் திருவள்ளுவர் தெருவில் உள்ள மறைவான இடத்திற்கு வரவழைத்தார்.
சம்பவ இடத்திற்கு வந்த நபர், பிரசாந்துடன் தனிமையில் இருந்துவிட்டு, தனது மூன்று நண்பர்களை போன் செய்து வரவழைத்தார்.
பின், நான்கு பேரும் சேர்ந்து பிரசாந்தை கையால் தாக்கி, அவரது ஒரு சவரன் செயின் மற்றும் மொபைல் போனை பறித்து சென்றனர்.
இதுகுறித்து, விருகம்பாக்கம் போலீசார் விசாரித்தனர்.
தொடர்ந்து, சாலிகிராமத்தைச் சேர்ந்த லோகேஷ், 20, சஞ்சய், 19, வனத்தை சின்னப்பன், 19, மற்றும் சந்திரன், 19, ஆகிய நான்கு பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து, ஒரு சவரன் செயின் பறிமுதல் செய்யப்பட்டது.