ADDED : செப் 05, 2024 01:01 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கண்ணகிநகர், சோழிங்கநல்லுார் மண்டலம், 196வது வார்டுக்கு உட்பட்ட கண்ணகி நகரில், 23,704 வீடுகள் உள்ளன. இங்கு, ஐந்து ஆண்டுகளாக முதல் தலைமுறை பட்டதாரிகள் அதிகரித்து வருகின்றனர்.
இவர்களின் வாழ்க்கை தரம் மேம்பட, இங்கு நவீன நுாலகம் அமைக்க வேண்டும் என, பட்டதாரிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து, 11,158 சதுர அடி பரப்பளவு இடம் ஒதுக்கப்பட்டது.
இதில், 4 கோடி ரூபாயில் இரண்டடுக்கு உடைய நுாலகம் கட்டப்படுகிறது. தரைதளம், 5,754 சதுர அடியும், முதல் தளம் 2,849 சதுர அடி பரப்பிலும் அமைகிறது.
ஒரே நேரத்தில், 50 பேர் அமர்ந்து படிக்கும் வகையில், அரங்கு மற்றும் கூட்ட அரங்கு உள்ளிட்ட வசதிகளுடன் அமைகிறது. ஓராண்டுக்குள் நுாலகம் பயன்பாட்டுக்கு வரும் என, நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அதிகாரிகள் கூறினர்.