/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
அரிவாளால் வெட்டப்பட்டவர் பலி கொலை வழக்கில் 4 பேர் கைது
/
அரிவாளால் வெட்டப்பட்டவர் பலி கொலை வழக்கில் 4 பேர் கைது
அரிவாளால் வெட்டப்பட்டவர் பலி கொலை வழக்கில் 4 பேர் கைது
அரிவாளால் வெட்டப்பட்டவர் பலி கொலை வழக்கில் 4 பேர் கைது
ADDED : செப் 18, 2024 12:20 AM

மணலி,
மணலி, அரிகிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன், 25. இவர், 9ம் தேதி, மணலி வ.உ.சி.நகரில் குடிபோதையில் நடந்து சென்றார்.
அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த நால்வர் கும்பல் அங்கு நின்றிருந்தனர். மதுபோதையில் வந்த மணிகண்டன், அவர்களை இடித்து விட வாக்குவாதம் ஏற்பட்டது.
ஆத்திரமடைந்த மணிகண்டன், அருகில் கடையில் இருந்த அரிவாளை எடுத்து வந்து கும்பலை வெட்ட முயன்றார். அப்போது அந்த கும்பல், மணிகண்டனிடம் இருந்து அரிவாளை பிடுங்கி, அவரை வெட்டி தப்பியது.
இதில் தலையில் பலத்த காயமடைந்தவரை, அக்கம்பக்கத்தினர் மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
இது குறித்து மணலி போலீசார் விசாரித்து, அதே பகுதியை சேர்ந்த ஆகாஷ், 19, சந்தோஷ், 19, காமேஷ், 20, வம்சி, 19, ஆகியோரை, கொலை முயற்சி வழக்கின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த நிலையில், சிகிச்சையில் இருந்த மணிகண்டன் நேற்று இரவு உயிரிழந்தார். இதையடுத்து போலீசார் கொலை வழக்காக மாற்றி விசாரிக்கின்றனர்.