/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கடை மீது பெட்ரோல் குண்டு வீசிய சிறார் உட்பட 4 பேர் கைது
/
கடை மீது பெட்ரோல் குண்டு வீசிய சிறார் உட்பட 4 பேர் கைது
கடை மீது பெட்ரோல் குண்டு வீசிய சிறார் உட்பட 4 பேர் கைது
கடை மீது பெட்ரோல் குண்டு வீசிய சிறார் உட்பட 4 பேர் கைது
ADDED : மே 31, 2024 12:51 AM

வண்ணாரப்பேட்டை, திருவொற்றியூரைச் சேர்ந்தவர் சாகுல் ஹமீது; பழைய வண்ணாரப்பேட்டை, என்.என்.கார்டன் பகுதியில் காலணி கடை வைத்துள்ளார்.
நேற்று முன்தினம், 'பைக்'கில் வந்த மூவர் கும்பல், மூடியிருந்த இவரது கடை மீது பெட்ரோல் குண்டு வீசிவிட்டுச் சென்றுள்ளனர். இதில், கடையின் ஷட்டர் சேதமானது.
இது குறித்து, வண்ணாரப்பேட்டை போலீசார் விசாரித்து, சம்பவத்தில் ஈடுபட்ட கொருக்குப்பேட்டை விக்னேஷ், 19, ராயபுரம் பூபாலன், 23, மற்றும் 17 வயதுடைய இரு சிறுவர்கள் உட்பட நான்கு பேரை, நேற்று கைது செய்தனர்.
விசாரணையில் சில நாட்களுக்கு முன், விக்னேஷ் தன் நண்பரான வெள்ளை நாகராஜுடன் சென்று, தாக்கப்பட்ட காலணி விற்பனை கடை அருகேயுள்ள துணிக்கடையில் துணி எடுத்துள்ளார்.
பின், பணம் தராமல் உரிமையாளரை மிரட்டிவிட்டுச் சென்றுள்ளனர். இது குறித்து துணிக்கடை உரிமையாளர், வண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதனால், வெள்ளை நாகராஜ் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார். அதற்கு பழிவாங்கும் நோக்கத்தில், துணி கடை மீது பெட்ரோல் குண்டு வீச, விக்னேஷ் தன் கூட்டாளிகளுடன் சென்றுள்ளார்.
அப்போது, துணிக்கடை மீது வீசிய பெட்ரோல் குண்டு தவறுதலாக, மூடியிருந்த காலணி விற்பனை கடையில் விழுந்தது தெரிந்தது.