/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
இ.சி.ஆரில் கத்தியுடன் ரகளை அச்சுறுத்திய 4 ரவுடிகள் கைது
/
இ.சி.ஆரில் கத்தியுடன் ரகளை அச்சுறுத்திய 4 ரவுடிகள் கைது
இ.சி.ஆரில் கத்தியுடன் ரகளை அச்சுறுத்திய 4 ரவுடிகள் கைது
இ.சி.ஆரில் கத்தியுடன் ரகளை அச்சுறுத்திய 4 ரவுடிகள் கைது
ADDED : ஜூலை 26, 2024 12:39 AM

சைதாப்பேட்டை, இ.சி.ஆர்., பனையூரில், கடந்த 5ம் தேதி நான்கு ரவுடிகள், பட்டாக்கத்தியால் 'கேக்' வெட்டி, பிறந்தநாள் கொண்டாடினர். பின், காரில் அமர்ந்து கொண்டு கத்தியை சாலையில் உரசி, தீக்கனல் பரவவிட்டு, பொதுமக்களை அச்சுறுத்தினர். இதை, சிலர் வீடியோ எடுத்து, சமூக வலைதளங்களில் பதிவேற்றினர்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து, போலீசார் அவர்களை தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம், சைதாப்பேட்டையில் கஞ்சா விற்ற நான்கு பேரை, கைது செய்தனர்.
இவர்களது அடையாளம், பட்டாக்கத்தியால் கேக் வெட்டிய ரவுடிகளின் உருவத்துடன் ஒத்துப்போனது. தீவிர விசாரணையில் இவர்கள், இ.சி.ஆரில் மக்களை அச்சுறுத்திய நபர்கள் என்பது உறுதியானது.
இதையடுத்து சைதாப்பேட்டை, காரணித்தோட்டம் பகுதியைச் சேர்ந்த எழிலரசன், 29, வினோத், 19, விக்னேஷ், 28, சரவணன், 19, ஆகியோரை, சைதாப்பேட்டை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 2 கிலோ கஞ்சா, கார், பைக் ஒன்றையும் பறிமுதல் செய்தனர்.