/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஓடிவந்த 4 சிறுமியர் மெரீனாவில் மீட்பு
/
ஓடிவந்த 4 சிறுமியர் மெரீனாவில் மீட்பு
ADDED : மே 25, 2024 06:18 PM
மெரினா : திருச்சி, இடைமலைப்பட்டி புதுாரை சேர்ந்த 8 மற்றும் 9ம் வகுப்பு படிக்கும் இரு சகோதரிகள் மற்றும் அவர்களின் பெரியம்மா மகள்களான 14 , 12 வயது சிறுமியர் என நான்கு பேர் பேருந்தில் ஏறி, நேற்று முன்தினம் காலை சென்னை தாம்பரம் வந்துள்ளனர். பின் நான்கு சிறுமியரும் அங்கிருந்து மெரினா, அண்ணா சதுக்கம் உழைப்பாளர் சிலை பின்புறம் உள்ள கடற்கரையில் விளையாடிக்கொண்டிருந்தார்.
அங்கு ரோந்து பணியில் இருந்த மெரினா போலீஸ் இன்ஸ்பெக்டர் இளையராஜா மற்றும் போலீசார் சிறுமியரை கண்டு சந்தேகம் அடைந்து, அவர்களிடம் விசாரித்தனர். அப்போது, அவர்கள் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் என தெரிந்தது. பெற்றோர்கள் திட்டிய ஆத்திரத்தில் வீட்டை விட்டு ஓடி வந்ததுள்ளனர். நான்கு சிறுமியரையும் மீட்ட போலீசார், திருச்சி போலீசாரிடம் தகவல் தெரிவித்தனர். சிறுமியர் காணாமல் போனதாக அங்குள்ள போலீசாரிடம் புகார் அளித்தது தெரிந்தது. திருச்சி போலீசார் எடுத்த நடவடிக்கையில் சிறுமியரின் பெற்றோர், அவர்களை சென்னை வந்து அழைத்து சென்றனர்.