ADDED : மே 31, 2024 12:45 AM

சென்னை, சென்னை மாநகராட்சியில், பாதசாரிகளுக்கு ஏதுவாக நான்கு சாலைகளின் நடைபாதைகளை தரம் உயர்த்துவது தொடர்பாக, மாநகராட்சி தலைமை பொறியாளர் ஆய்வு நடத்தினார்.
சென்னை மாநகராட்சி சார்பில், சாலைகளில், பாதசாரிகளுக்கு ஏதுவான சாலையை உருவாக்கும் வகையில், நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
முதற்கட்டமாக, ரத்தன் பஜார் அண்ட் இவினிங் பஜார் சாலை, வேப்பேரி நெடுஞ்சாலை, சைடன்ஹாம்ஸ் சாலை, காந்தி இர்வின் சாலை ஆகிய நான்கு சாலைகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
இச்சாலையில், மாற்றுத்திறனாளிகள், முதியோர் உள்ளிட்டோர் சாலையை கடக்கவும், சாலையோரங்களில் நடப்பதற்கும் உள்ள வசதிகள் குறித்த ஆய்வை, மாநகராட்சி தலைமை பொறியாளர் ராஜேந்திரன் நேற்று மேற்கொண்டார்.
இதுகுறித்து, தலைமை பொறியாளர் ராஜேந்திரன் கூறுகையில், ''பாதசாரிகளுக்கு ஏதுவாக நான்கு சாலையை மாற்றியமைப்பது குறித்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. தொடர்பான பயிலரங்கமும் இன்று நடைபெற உள்ளது. தொடர்ந்து, அடுத்தக்கட்ட பணிகள் நடக்கும்,'' என்றார்.