/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மளிகை கடைக்காரர் வீட்டில் 40 சவரன் மாயம்
/
மளிகை கடைக்காரர் வீட்டில் 40 சவரன் மாயம்
ADDED : மார் 10, 2025 12:40 AM
எம்.ஜி.ஆர்.நகர், எம்.ஜி.ஆர்.நகர் அங்காள பரமேஸ்வரி பிரதான தெருவைச் சேர்ந்தவர் அன்பரசன், 38. இவர், நாகாத்தம்மன் கோவில் தெருவில், மளிகைக்கடை நடத்தி வருகிறார்.
இவரது வீட்டிற்கு, கடந்த 5ம் தேதி, நெல்லையில் இருந்து உறவினர்கள் வந்துள்ளனர். அவர்களுக்கு, தன்னிடம் உள்ள நகைகளை அன்பரசனின் மனைவி காண்பித்தார். பின்னர், நலம் விசாரித்து சொந்த ஊர் திரும்பினர். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு அன்பரசன் பீரோவில் இருந்த நகைகளை சரிபார்த்தார். அப்போது, 40 சவரன் நகைகள் மாயமானது தெரியவந்தது.
இது தொடர்பாக வந்து சென்ற உறவினர்களிடமும் விசாரித்தார். அவர்கள் தங்களுக்கும் நகை மாயமானதற்கும் சம்பந்தம் இல்லை என, தெரிவித்தனர். இது குறித்து எம்.ஜி.ஆர்., நகர் போலீசார் விசாரிக்கின்றனர்.