ADDED : மே 29, 2024 12:07 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கொருக்குப்பேட்டை, கொருக்குப்பேட்டை ரயில் நிலைய நடைபாதையில் ரேஷன் அரிசி மூட்டைகள் கேட்பாரற்று கிடப்பதாக, கொருக்குப்பேட்டை ரயில்வே போலீசாருக்கு நேற்று தகவல் கிடைத்தது.
இதையடுத்து, கொருக்குப்பேட்டை ரயில்வே இன்ஸ்பெக்டர் சசிகலா தலைமையிலான ரயில்வே போலீசார் சம்பவ இடத்தில் நேற்று ஆய்வு மேற்கொண்டனர்.
கொருக்குப்பேட்டை ரயில் நிலைய நடைபாதையில் கேட்பாரற்று கிடந்த 400 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து விசாரிக்கின்றனர்.