/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
இ.சி.ஆரில் மினி மாரத்தான் 4,000 பேர் பங்கேற்று உற்சாகம்
/
இ.சி.ஆரில் மினி மாரத்தான் 4,000 பேர் பங்கேற்று உற்சாகம்
இ.சி.ஆரில் மினி மாரத்தான் 4,000 பேர் பங்கேற்று உற்சாகம்
இ.சி.ஆரில் மினி மாரத்தான் 4,000 பேர் பங்கேற்று உற்சாகம்
ADDED : மார் 09, 2025 01:24 AM

கானத்துார், மகளிர் தினத்தையொட்டி, தாம்பரம் காவல் ஆணையரகம் சார்பில், 'பெண்கள் அதிகாரம் மற்றும் உடல் ஆரோக்கியம்' என்ற தலைப்பில், இ.சி.ஆரில் நேற்று, மினி மாரத்தான் போட்டி நடந்தது.
எம்.ஜி.எம்., முதல் முட்டுக்காடு வரை இருவழி பாதையில், 4,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
போட்டியை, நடிகை சினேகா மற்றும் காவல் கூடுதல் கமிஷனர் மகேஷ்வரி துவக்கி வைத்தனர். தாம்பரம் போலீஸ் கமிஷனர் அபின் தினேஷ் மோதக், பங்கேற்றவர்களுக்கு, பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், பள்ளிக்கரணை காவல் துணை கமிஷனர் கார்த்திகேயன் உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகள் மற்றும் தன்னார்வலர்கள், பொதுமக்கள் பங்கேற்றனர்.