ADDED : செப் 10, 2024 12:43 AM
சாஸ்திரிநகர், -
பெரும்பாக்கம், எழில்நகரைச் சேர்ந்தவர் ஜெயராஜ், 26; ஆட்டோ ஓட்டுனர். கடந்த 7ம் தேதி இரவு, நண்பர்களுடன், பெசன்ட் நகர் வேளாங்கண்ணி சர்ச் திருவிழாவுக்கு சென்றார்.
நள்ளிரவு 1:00 மணிக்கு, கடற்கரையில் அமர்ந்து கானா பாட்டு பாடிக் கொண்டிருந்தனர். பக்கத்தில், மற்றொரு குழுவினரும் கானா பாடினர். ஒரு கட்டத்தில், ஊர் பெயர் கூறி பாட்டு பாடும்போது, இரண்டு தரப்புக்கும் தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த ஜெயராஜ், ஹெல்மெட்டால் அப்பு என்ற நபரை தாக்கி உள்ளார்.
பதிலுக்கு, ஐந்து பேர் சேர்ந்து ஜெயராஜை பலமாக தாக்கினர். அப்பு, கத்திரிக்கோலால் ஜெயராஜை குத்தி கொலை செய்தார்.
சாஸ்திரி நகர் போலீசார், அம்பத்துாரைச் சேர்ந்த அப்பு, 33, சண்முகம், 29, ஆமோஸ், 26, சரண்ராஜ், 28, சந்தோஷ்குமார், 25, ஆகியோரை, நேற்று கைது செய்தனர்.
கொலைக்கு வேறு ஏதாவது காரணம் இருக்குமா என, போலீசார் தொடர்ந்து விசாரிக்கின்றனர்.

