/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
போதையில் வாகனங்களை நொறுக்கிய 5 பேர் கைது
/
போதையில் வாகனங்களை நொறுக்கிய 5 பேர் கைது
ADDED : ஆக 22, 2024 12:18 AM
சேத்துப்பட்டு, சேத்துப்பட்டு, மங்களாபுரம், ஐந்தாவது தெருவைச் சேர்ந்தவர் ஜெயசீலன் 56; 'கேபிள் டிவி' ஆபரேட்டர். நேற்று முன்தினம் இரவு, இவரது 'ஹூண்டாய் சான்ட்ரோ' காரை, அதே பகுதியிலுள்ள ஜெகநாதபுரம் மூன்றாவது தெரு அருகே நிறுத்தியுள்ளார்.
நேற்று காலை பார்த்த போது, பின்பக்க கண்ணாடிகள் உடைந்திருந்தன. இதேபோல், அடுத்தடுத்து நிறுத்தப்பட்டிருந்த மற்றொரு கார், ஆட்டோ கண்ணாடிகளும் உடைக்கப்பட்டு இருந்தன.
இதுகுறித்த புகாரின்படி, சேத்துப்பட்டு போலீசார் விசாரித்தனர். சம்பவ இடத்திலிருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்த போது, எட்டு பேர் கொண்ட கும்பல், கஞ்சா போதையில் வாகனங்களை அடித்து உடைத்து அட்டகாசம் செய்தது தெரிந்தது.
சம்பவத்தில் ஈடுபட்ட ஆயிரம் விளக்கைச் சேர்ந்த பிரான்சிஸ் அபிஷேக் 18, சேத்துப்பட்டு பகுதியைச் சேர்ந்த கமலேஷ், 21, விஜயகுமார், 19, நிமேஷ், 19, மற்றும் ஷியாம், 18, ஆகிய ஐந்து பேரை, போலீசார் நேற்று கைது செய்து விசாரிக்கின்றனர். வழக்கில் தொடர்புடைய மற்றவர்களை தேடி வருகின்றனர்.