/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வாலிபர் கொலையில் 5 பேர் சிக்கினர்
/
வாலிபர் கொலையில் 5 பேர் சிக்கினர்
ADDED : ஜூன் 27, 2024 12:28 AM
கோட்டூர்புரம், சைதாப்பேட்டை, மறைமலை அடிகளார் பாலத்தின் கீழே, 30 வயது மதிக்கத்தக்க நபர், நேற்று முன்தினம் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
இதை பார்த்த அங்கிருந்தோர், கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக, ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
விசாரணையில், கொலை செய்யப்பட்டவர் கண்ணகி நகரைச் சேர்ந்த ஆகாஷ், 26, என தெரிந்தது.
தொடர் விசாரணையில், கண்ணகி நகரைச் சேர்ந்த அருண், 31, என்பவருக்கும், ஆகாஷுக்கும் ஏற்கனவே முன்விரோதம் காரணமாக, அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இந்த முன்விரோதத்தில், அருண் தன் நண்பர்களான அஜய், 24, தாமஸ், 23, பிரதீப், 24, ராஜேஷ், 20, ஆகியோருடன் சேர்ந்து, ஆகாைஷ கத்தியால் குத்தி கொலை செய்தது தெரிந்தது.
நேற்று மேற்கண்ட ஐந்து பேரையும் கைது செய்த போலீசார், நான்கு கத்திகளையும் பறிமுதல் செய்தனர்.