ADDED : ஜூலை 18, 2024 12:16 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நங்கநல்லுார்,ஆலந்துார் மண்டலம், நங்கநல்லுாரில் உள்ள 100 அடி சாலையில் தனியார் மருத்துவமனைகள், மின்வாரிய அலுவலகம், ரேஷன் கடைகள், பூங்கா உள்ளிட்டவை அமைந்துள்ளன.
மடிப்பாக்கம், உள்ளகரம், புழுதிவாக்கம், வாணுவம்பேட்டை பகுதி மக்கள், பழவந்தாங்கல் ரயில் நிலையம், ஜி.எஸ்.டி., சாலைக்கு செல்ல, இச்சாலையை அதிகம் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், பாதாள சாக்கடை திட்டத்திற்காக கடந்த மாதம், இச்சாலையில் பள்ளம் தோண்டி குழாய் புதைக்கப்பட்டது. பின், மூடிய பள்ளத்தின் மீது சில இடங்களில் மட்டும் ஜல்லிக்கற்கள் கொட்டப்பட்டுள்ளது.
மீதமுள்ள இடங்கள், மண் நிறைந்து காணப்படுகிறது. மழை பெய்தால், அப்பகுதி சகதியாகி விடுகிறது. இதனால், போக்குவரத்து பாதிக்கப்படுகிறது.
எனவே, இச்சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.