/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மாஜி அரசு ஊழியர் வீட்டில் 50 சவரன் நகை திருட்டு
/
மாஜி அரசு ஊழியர் வீட்டில் 50 சவரன் நகை திருட்டு
ADDED : ஆக 05, 2024 12:47 AM
ஆவடிஆவடி அடுத்த அயப்பாக்கம், திருப்பதி கொடை சாலை, குமரன் தெருவைச் சேர்ந்தவர் குணசேகரன், 61. ராணிப்பேட்டை மாவட்ட ஊரக வளர்ச்சி துறையில், உதவி இயக்குனராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.
கடந்த 27ல், மூத்த மகளை பார்க்க, குடும்பத்துடன் பெங்களூரு சென்றார். நேற்று முன்தினம் காலை, மேகலா என்பவர், அவரது வீட்டிற்கு கோலம் போட சென்றார். அப்போது, வீட்டின் முன்புற கதவின் பூட்டு உடைக்கப்பட்டு, வீடு திறந்து கிடந்துள்ளது.
இதுகுறித்து தகவலறிந்த குணசேகரன், உடனே புறப்பட்டு வீடு திரும்பினார். பீரோவில் இருந்த 50 சவரன் நகை மற்றும் அரை கிலோ வெள்ளி பொருட்கள் திருடு போனது தெரிந்தது. அவரது புகாரையடுத்து, வீட்டில் இருந்த 'சிசிடிவி' கேமரா பதிவு, கைரேகை தடயங்களை திருமுல்லைவாயில் போலீசார் சேகரித்து விசாரித்து வருகின்றனர்.