/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
௶'ரோபோடிக்' முறையில் 500 இதய அறுவை சிகிச்சை
/
௶'ரோபோடிக்' முறையில் 500 இதய அறுவை சிகிச்சை
ADDED : அக் 23, 2024 12:24 AM

சென்னை, அப்பல்லோ மருத்துவமனை, ரோபோடிக் முறையில், 500வது இதய அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்துள்ளது.
சென்னையில், அப்பல்லோ மருத்துவ குழும தலைவர் பிரதாப் சி ரெட்டி, இதய அறுவை சிகிச்சை நிபுணர் யூசுப் ஆகியோர் அளித்த பேட்டி:
'ரோபோடிக்' உதவியுடன் செய்யப்படும் இதய அறுவை சிகிச்சை, 2019ல் துவக்கப்பட்டது. இந்த முறையில், 'ஸ்டெர்னோடோமி' அல்லது மார்பில் பெரிய அளவில் துளையிட்டு சிகிச்சை செய்யாமல், துல்லியமான சிகிச்சையை அளிக்க வேண்டும்.
அதிநவீன தொழில்நுட்பம் வாயிலாக, சிறிய கீறல்கள் வாயிலாக, சிக்கலான அறுவை சிகிச்சை செய்ய முடிகிறது. இதற்காக, சிறிய ரோபோ கைகள், 3டி கேமரா ஆகியவை பயனன்படுத்தப்படுகிறது.
இவை, திறந்தநிலை இதய அறுவை சிகிச்சையை விட, பல வகையான மேம்பட்ட நன்மைகளை வழங்குகிறது. குறுகிய காலத்தில் குணமடைதல், ரத்த இழப்பு குறைவு, நோயாளிகளுக்கு குறைந்த வலி உள்ளிட்ட நன்மைகளும் உள்ளன. பல நோயாளிகள், ரோபோடிக் அறுவை சிகிச்சைக்கு அடுத்த நாளே நடக்க துவங்குகின்றனர்.
ரோபோடிக் உதவியுடன், 500 இதய சிகிச்சைகள் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த மைல்கல்லை எட்டுவது என்பது, தொழில்நுட்பத்தின் வளர்ந்து வரும் திறன்களும், நோயாளிகள் எங்கள் மீது வைத்துள்ள நம்பிக்கைக்கும் சான்று. இந்த சிகிச்சை முறையில், 30 - 60 வயதுடையோர் அதிகம் பயன்பெறுகின்றனர்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

