/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கழிவுநீர் லாரிக்கு ரூ.50,000 அபராதம்
/
கழிவுநீர் லாரிக்கு ரூ.50,000 அபராதம்
ADDED : ஜூலை 14, 2024 12:47 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவேற்காடு, திருவேற்காடு நகராட்சியில், வேலப்பன்சாவடி தனியார் கல்லுாரி எதிரில், கழிவுநீர் லாரி ஒன்று, அங்குள்ள மழைநீர் வடிகாலில் கழிவுநீர் கொட்டுவதாக, நேற்று முன்தினம் தகவல் கிடைத்தது.
சம்பவ இடத்திற்கு சென்ற நகராட்சி அதிகாரிகள், அந்த வாகனத்தை சிறைபிடித்தனர்.
விசாரணையில், திருவேற்காடு, நுாம்பல் பகுதியைச் சேர்ந்த ரஞ்சித் என்பவருக்கு சொந்தமான வாகனம் என தெரிந்தது.
விதிமீறி நீர்நிலையில் கழிவுநீர் கொட்டியதற்காக, அவருக்கு 50,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. திருவேற்காடு போலீசார் விசாரிக்கின்றனர்.