ADDED : ஜூன் 19, 2024 12:09 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வேப்பேரி, சென்னை கமிஷனர் அலுவலகத்திற்கு உட்பட்ட பகுதியில், கஞ்சா விற்பனையில் ஈடுபடுவோர், அவர்களுக்கு சப்ளை செய்வோரை போலீசார் களையெடுத்து வருகின்றனர்.
அதன்படி கடந்த ஏழு நாட்களாக, வெவ்வேறு பகுதியில் நடத்தப்பட்ட சோதனையில், கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த, 51 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து, 60 கிலோ கஞ்சா, 55 கிராம் மெத் ஆம்பெட்டமைன் போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
நடப்பாண்டில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த 153 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.