ADDED : மார் 11, 2025 01:25 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அம்பத்துார்,
செங்குன்றம் அடுத்த பாடியநல்லுார் அருகே, ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
பாடியநல்லுாரில் உள்ள கிடங்கு அருகே, சந்தேகத்திற்கு இடமான வகையில் லாரியில் அரிசி ஏற்றி கொண்டிருந்தவர்களை மடக்கி பிடித்தனர். அவர்கள், செங்குன்றத்தைச் சேர்ந்த ராஜி, 40, ராஜேஷ், 24, சதீஷ், 29, அப்துல் ரகுமான், 47, மற்றும் துரை பாண்டியன், 19, என்பதும், ரேஷன் அரிசி வாங்கி ஆந்திர மாநிலத்திற்கு கடத்துவதும் தெரியவந்தது. அவர்களிடம் இருந்து 53,000 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
ஐந்து பேரையும் கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, நேற்று சிறையில் அடைத்தனர்.