/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
உத்தனாட்சி அம்மன் கோவில் 54ம் ஆண்டு ஆடித்திருவிழா
/
உத்தனாட்சி அம்மன் கோவில் 54ம் ஆண்டு ஆடித்திருவிழா
ADDED : ஜூலை 18, 2024 12:36 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரும்பாக்கம், அரும்பாக்கம் - பூந்தமல்லி நெடுஞ்சாலையில், 800 ஆண்டுகள் பழமையான கிராம தேவதை பிடாரி உத்தனாட்சி அம்மன் கோவில் உள்ளது.
ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோவிலில், ஆண்டுதோறும் ஆடித்திருவிழா வெகு சிறப்பாக நடக்கும். அந்தவகையில், 54ம் ஆண்டிற்கான ஆடித்திருவிழா, நாளை காலை சிறப்பு பூஜைகளுடன் துவங்குகிறது.
வரும் 21ம் தேதி காலை சிறப்பு அர்ச்சனையும், பகல் 12:00 மணிக்கு கூழ்வார்த்தல், மாலை 7:00 மணிக்கு கும்பம் படைத்தலும் நடக்கின்றன.
கோவில் கட்டுமான பணிகள் நடப்பதால், எளிய முறையில் திருவிழா நடத்த விழாக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.