/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ரூ.66.15 கோடியில் 58 தாழ்தள பஸ்கள் இயக்கம் துவக்கம்
/
ரூ.66.15 கோடியில் 58 தாழ்தள பஸ்கள் இயக்கம் துவக்கம்
ரூ.66.15 கோடியில் 58 தாழ்தள பஸ்கள் இயக்கம் துவக்கம்
ரூ.66.15 கோடியில் 58 தாழ்தள பஸ்கள் இயக்கம் துவக்கம்
ADDED : ஆக 05, 2024 01:18 AM

சென்னை, சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்திற்கு, முதியோர், மாற்றுத் திறனாளிகள், பெண்கள் எளிதில் ஏறும் வகையில், நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய, 611 தாழ்தள பேருந்துகள் வாங்க நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது.
அதன் முதற்கட்டமாக, 66.15 கோடி ரூபாயில் 58 தாழ்தள பேருந்துகள் வாங்கப்பட்டுள்ளன. மேலும், பி.எஸ்., 6 இன்ஜின் வகை சாதாரண பேருந்து 30 என, 88 புதிய பேருந்துகள் வாங்கப்பட்டுள்ளன.
அவற்றுடன், புதுப்பிக்கப்பட்ட பேருந்துகள் என, 100 பேருந்துகளின் சேவையை, அமைச்சர் உதயநிதி நேற்று சென்னை பல்லவன் இல்லத்திலிருந்து கொடியசைத்து துவக்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர், போக்குவரத்து துறை கூடுதல் தலைமை செயலர் பனீந்திர ரெட்டி, மாநகர போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குனர் ஆல்பி வர்கீஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.