ADDED : ஜூன் 28, 2024 12:18 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை, சென்னை மாவட்ட ஆதிதிராவிடர் பள்ளிகளில், காலியாக உள்ள முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள், தற்காலிக தொகுப்பூதியத்தில் நிரப்பப்பட உள்ளன.
கன்னிகாபுரம் ஆதிதிராவிடர் ஆண்கள் மேல்நிலை பள்ளியில் நான்கு ஆசிரியர் பணியிடம், மகளிர் பள்ளியில் ஒரு வேதியியல் ஆசிரியர்; மீனம்பாக்கம் பள்ளியில் தமிழ் ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன.
தகுதியுள்ளவர்கள், சென்னை கலெக்டர் அலுவலகத்தில் நேரடியாகவே அல்லது பதிவஞ்சல் வாயிலாகவோ, ஜூலை 5ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.