ADDED : செப் 07, 2024 12:22 AM

அண்ணா நகர், அண்ணாநகர் போலீசார், நேற்று காலை பெரம்பூர் ரயில் நிலையம் அருகில் கண்காணிப்பு பணியில் இருந்தனர். அப்போது, திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி பகுதியை சேர்ந்த ரியாஸ் அகமது, 29 என்பவர், ஆட்டோவில் பெரிய பார்சலை ஏற்றிக்கொண்டிருந்தார். அவரை மடக்கி பிடித்து சோதித்ததில், பார்சலில் 1.50 லட்சம் மதிப்புள்ள 6.200 கிராம் கஞ்சா இருந்தது. விசாரணையில், கேரளாவில் உள்ள நண்பரின் உதவியுடன், ஒடிசாவுக்கு சென்று அங்கிருந்து கஞ்சாவை வாங்கி வந்தது தெரிந்தது.
சென்னை புறநகர் பகுதியான ஆவடி அடுத்த வீராபுரம் பகுதியில், அம்பத்துார் மதுவிலக்கு போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது, செங்குன்றம் அடுத்த வாணியன்சத்திரம் பகுதியை சேர்ந்த வினோத், கார்த்திக் ஆகிய இருவர், 3 கிலோ கஞ்சா மறைத்து வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது. இருவரையும் கைது செய்து, கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.