/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
6 டன் ரேஷன் அரிசி அம்பத்துாரில் பறிமுதல்
/
6 டன் ரேஷன் அரிசி அம்பத்துாரில் பறிமுதல்
ADDED : ஜூன் 13, 2024 12:35 AM
அம்பத்துார், சென்னை வடக்கு குடிமை பொருள் கடத்தல் தடுப்பு போலீசார், நேற்று முன்தினம், அத்திப்பட்டு பிரதான சாலையில், கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, வடசென்னையில் இருந்து, 'பொலிரோ' ரக வாகனத்தில், ஆந்திரா மாநிலம் தடாவிற்கு கடத்தப்பட்ட 2,050 கிலோ ரேஷன் அரிசி சிக்கியது.
அந்த வாகனத்தை ஓட்டி வந்த கும்மிடிப்பூண்டி, எலாவூரைச் சேர்ந்த பரமானந்தம், 31, என்பவர் சிக்கினார். அவருடன் வந்த மதன், பிரவீன் ஆகியோர் தப்பினர். அரிசி மற்றும் வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.
நேற்று காலை, மாதவரத்தில் இருந்து செங்குன்றத்திற்கு சென்ற, சரக்கு வாகனத்தை சோதனையிட்டதில், 4,000 கிலோ ரேஷன் அரிசி சிக்கியது. அரிசி மற்றும் வாகனத்தை பறிமுதல் செய்த போலீசார், அரிசி கடத்தலில் ஈடுபட்ட, தண்டையார்பேட்டையை சேர்ந்த பிரகாஷ், 44, ராசு குட்டி, 23, திருவள்ளூர் மாவட்டம், பெரிய ஓபுலாபுரம், குமார், 44, ஆகியோரை கைது செய்தனர்.

