/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
அப்பல்லோ மருத்துவமனையில் 6,000 ரோபோடிக் ஆப்பரேஷன்
/
அப்பல்லோ மருத்துவமனையில் 6,000 ரோபோடிக் ஆப்பரேஷன்
ADDED : ஆக 15, 2024 12:28 AM

சென்னை, இந்தியாவிலேயே, 6,000க்கும் மேற்பட்ட ரோபோடிக் அறுவை சிகிச்சைகளை செய்திருக்கும் முதல் மருத்துவமனை என்ற பெருமையை அப்பல்லோ குழுமம் பெற்றுள்ளது.
இதுகுறித்து, அப்பல்லோ குழும தலைவர் பிரதாப் சி ரெட்டி கூறியதாவது:
அப்பல்லோ மருத்துவமனையில், 6,000க்கும் மேற்பட்ட ரோபோடிக் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
எளிதில் நம்ப முடியாத மைல்கலை எட்டியிருப்பதில் உண்மையிலேயே பெருமைப்படுகிறேன்.
அப்பல்லோ மருத்துவமனையில் உள்ள டாக்டர்கள், சுகாதார நிபுணர்களின் கடின உழைப்பும், நிபுணத்துவமிக்க திறமையும், இச்சாதனையை சாத்தியமாக்கி உள்ளது.
ரோபோடிக் அறுவை சிகிச்சை, எங்களின் மருத்துவ சேவையை அடுத்த கட்டத்திற்கு அழைத்து சென்றுள்ளது. சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு சிறப்பான பலன்களையும், குறுகிய காலத்தில் மீண்டு வருவதற்கான வாய்ப்பையும் அளித்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
துணை தலைவர் பிரீத்தா ரெட்டி கூறுகையில், ''மருத்துவ துறையில் முன்னணியில் இருக்கும் அப்பல்லோ குழுமம், நோயாளிகளுக்கு உலகத் ரம் வாய்ந்த பராமரிப்பை வழங்குவதற்கும், எங்களின் திறன்களை மேம்படுத்தவும், அதிநவீன தொழில்நுட்பங்களில் தொடர்ந்து முதலீடு செய்து வருகிறோம்,'' என்றார்.