ADDED : செப் 08, 2024 12:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை, புதுப்பேட்டை, தெற்கு கூவம் சாலையில், எழும்பூர் போலீசார் நேற்று காலை கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, சந்தேகத்திற்கு இடமான வகையில் சுற்றித்திரிந்த பெண் உட்பட நான்கு பேரை பிடித்து சோதனை செய்தனர். இதில், 1.5 கிலோ கஞ்சா சிக்கியது.
இதுதொடர்பாக, புதுப்பேட்டையைச் சேர்ந்த வசந்தகுமார், 25, மயூரி, 38, பிரதாப், 24, கிஷோர் குமார், 20, ஆகியோரை கைது செய்தனர்.
அதேபோல, வியாசர்பாடி ரோந்தில் இன்பரசன், 23, யோகேஷ், 25, நரேஷ், 32, ஆகிய மூவரும் கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்டனர்.