/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மாநில கராத்தேவில் 72 பேருக்கு தங்கம்
/
மாநில கராத்தேவில் 72 பேருக்கு தங்கம்
ADDED : ஏப் 23, 2024 12:21 AM

சென்னை,தமிழ்நாடு மாநில கராத்தே அசோசியேஷன் சார்பில், 41வது மாநில கராத்தே சாம்பியன்ஷிப் போட்டி, கிண்டி மான்போர்ட் பள்ளி உள்விளையாட்டு அரங்கில், நேற்று நடந்தது.
தமிழகத்தின் 30க்கும் மேற்பட்ட மாவட்டங்களிலிருந்து, 800க்கும் அதிகமான வீரர் - வீராங்கனையர் பங்கேற்றனர். மொத்தம் 72 பிரிவுகளின் கீழ், வயதின் அடிப்படையில் போட்டிகள் நடந்தன.
ஒவ்வொரு பிரிவிலும் முதலிடம் பெற்றவருக்கு தங்கப்பதக்கம் வழங்கப்பட்டன. தங்கம் வென்ற வீரர்கள், அடுத்த மாதம் டில்லியில் நடக்க உள்ள தேசிய அளவிலான கராத்தே போட்டியில், தமிழகம் சார்பில் பங்கேற்பர்.
மான்போர்ட் பள்ளி தலைவர் ஜேக்கப் தேவகுமார் மற்றும் தமிழ்நாடு கராத்தே அசோசியேஷன் மாநில பொதுச் செயலர் அல்தாப் ஆலம் ஆகியோர் தலைமையில், போட்டிகள் நடந்தன.

