/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
'டெங்கு' கொசு உற்பத்தி ரூ.75,000 அபராதம்
/
'டெங்கு' கொசு உற்பத்தி ரூ.75,000 அபராதம்
ADDED : ஆக 09, 2024 12:32 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அடையாறு, அடையாறு மண்டலம், 171வது வார்டு, ஆர்.ஏ.புரம், திருவேங்கடம் தெருவில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்படுகிறது. பணி தளத்தில் தேங்கி நின்ற தண்ணீரில், டெங்கு பரப்பும் 'ஏடிஸ்' கொசுப்புழு உற்பத்தியாகி இருந்தது.
பலமுறை எச்சரிக்கை செய்தும், சுகாதாரமாக வைக்காத கட்டுமான நிறுவனத்திற்கு, மாநகராட்சி சுகாதாரத் துறை அதிகாரிகள், 25,000 ரூபாய் அபராதம் விதித்தனர்.
அதேபோல், டெங்கு பரப்பும் வகையில் இருந்ததாக, அதே பகுதி ஒரு கெமிக்கல் நிறுவனத்திற்கு 25,000 ரூபாயும், அடையாறு, கோவிந்தராஜபுரத்தில் உள்ள ஒரு தங்கும் விடுதிக்கு, 25,000 ரூபாயும் அபராதம் விதித்தனர்.