/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
திருநின்றவூரில் புது நடைமேடையில் 8 விரைவு ரயில் நின்று செல்லும்
/
திருநின்றவூரில் புது நடைமேடையில் 8 விரைவு ரயில் நின்று செல்லும்
திருநின்றவூரில் புது நடைமேடையில் 8 விரைவு ரயில் நின்று செல்லும்
திருநின்றவூரில் புது நடைமேடையில் 8 விரைவு ரயில் நின்று செல்லும்
ADDED : செப் 10, 2024 12:22 AM
சென்னை, திருநின்றவூர் ரயில் நிலையத்தில் 80 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள புது நடைமேடை பயன்பாட்டிற்கு வந்துள்ளது. மின்சார விரைவு ரயில்களும், இங்கு நின்று செல்வதால் பயணியர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
சென்னை சென்ட்ரல் -- திருவள்ளூர், அரக்கோணம் இடையே உள்ள முக்கியமான ரயில் நிலையம் திருநின்றவூர். இங்கு கோவில்கள், கல்லுாரிகள், தொழிற்சாலைகளும் இருப்பதால், இந்த ரயில் நிலையத்தில் எப்போதும் கூட்டம் அதிகமாக இருக்கும்.
தினமும் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர். பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளும் போதெல்லாம், இங்கு ரயில் சேவை பாதிக்கப்படுகிறது.
இதற்கிடையே, இங்கு 80லட்சம் ரூபாயில் புதிய நடைமேடை கட்டும் பணி முடிந்து, நேற்று முதல் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. இதனால், வழக்கமாக செல்லும் ரயில்களின் தாமதம் தவிர்ப்பதோடு, மின்சார விரைவு ரயில்களும் இங்கு நின்று செல்கின்றன. இதற்கு பயணியர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
இது குறித்து சென்னை ரயில் கோட்ட அதிகாரிகள் கூறியதாவது:
மின்சார ரயில்களின் சேவையில் பாதிப்பை தவிர்க்க, திருநின்றவூர் ரயில் நிலையத்தில் 80 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள புது நடைமேடை பயன்பாட்டிற்கு வந்துள்ளது.
இதனால், அரக்கோணம், திருவள்ளூர் வழியாக சென்னைக்கு இயக்கப்படும் எட்டு விரைவு மின்சார ரயில்களும் இங்கு நின்று செல்லும். தற்போது, நான்கு விரைவு மின்சார ரயில்கள் நின்று செல்ல துவங்கி உள்ளது. மற்றவையும் நின்று செல்ல, விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
15 ஆண்டு கோரிக்கை
திருநின்றவூர் ரயில் நிலையத்தில், புதுநடை மற்றும் சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும் என்ற 15 ஆண்டு கோரிக்கை நிறைவேறியுள்ளது. இதனால், மின்சார ரயில்களின் தாமதத்தை தவிர்ப்பதோடு, விரைவு ரயில்களும் நின்று செல்லும் வசதி கிடைப்பதால், பயணியருக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
- முருகையன்,
திருநின்றவூர் ரயில் பயணியர் பொதுநலச் சங்கச் செயலர்

