/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஐ.பி.எல்., டிக்கெட் விற்ற 8 பேர் கைது
/
ஐ.பி.எல்., டிக்கெட் விற்ற 8 பேர் கைது
ADDED : மே 28, 2024 12:11 AM
திருவல்லிக்கேணி, சேப்பாக்கம், எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில், கோல்கட்டா மற்றும் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே, நேற்று முன்தினம் ஐ.பி.எல்., கிரிக்கெட் இறுதிப்போட்டி நடந்தது.
இதில், விதிமீறி பிளாக்கில் ஒரு கும்பல் டிக்கெட்டுகளை விற்பதாக திருவல்லிக்கேணி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி, போலீசார் அங்கு சென்று தீவிரமாக கண்காணித்து, எட்டு பேர் கும்பலை கைது செய்தனர்.
விசாரணையில், ராயபுரம், பெரம்பூர் பகுதிகளில் தங்கி இருக்கும் நிலாத்ரி சேகர், 22, கார்த்திக்கேயன், 30, சிவானந்த கவுடா, 32, பலகிரி சையது பாஷா, 32, உள்ளிட்டோர் என தெரிந்தது. அவர்களிடம் இருந்து 1.42 லட்சம் ரூபாய் மதிப்பிலான 36 டிக்கெட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.