ADDED : ஜூலை 15, 2026 08:52 PM
அ நிறம் | அளவு
சென்னை: ரயில்வே பணிமனையில், நாளை மதியம் 1:40 மணி முதல் மாலை 5:40 மணி வரை மேம்பாட்டு பணிகள் நடக்கின்றன. இதனால் எட்டு ரயில்களில் சேவை ரத்து செய்யப்பட்டு உள்ளது.
கடற்கரை – செங்கல்பட்டு காலை 11:28, மதியம் 12:02, 12:30, 1:45 மற்றும் செங்கல்பட்டு – கடற்கரை மதியம் 1:35, மதியம் 2:15, மாலை 3:00, மாலை 4:25 மணி ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
பயணியர் வசதிக்காக, கடற்கரை – தாம்பரம் இடையே எட்டு மின்சார சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக, சென்னை ரயில் கோட்டம் தெரிவித்துள்ளது.
