/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பிளஸ் 1 பொது தேர்வில் 80.08 சதவீதம் பேர் தேர்ச்சி
/
பிளஸ் 1 பொது தேர்வில் 80.08 சதவீதம் பேர் தேர்ச்சி
ADDED : மே 15, 2024 12:31 AM
சென்னை, சென்னை மாநகராட்சி பள்ளிகளில் பிளஸ் 1 படித்த 80.08 சதவீதம் பேர், தேர்ச்சி பெற்றுள்ளனர்.
சென்னை மாநகராட்சி கல்வித்துறையின் கீழ், 206 தொடக்க, 130 நடுநிலை, 46 உயர்நிலை மற்றும் 35 மேல்நிலை என, 417 பள்ளிகள் உள்ளன. இவற்றில், 1.20 லட்சம் மாணவர்கள் பயின்று வருகின்றனர். கடந்த 2023 - 24ம் கல்வியாண்டில் பிளஸ் 1 பொதுத்தேர்வில் 2,417 மாணவர்கள்; 3,136 மாணவியர் என, 5,607 பேர் தேர்வு எழுதினர். இதில், 1,754 மாணவர்கள்; 2,736 மாணவியர் என, 4,490 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
அதன்படி, 70.98 சதவீத மாணவர்கள்; 87.24 சதவீத மாணவியர் என, 80.08 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
கடந்தாண்டு 80.04 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்ற நிலையில், தற்போது 0.04 சதவீதம் மட்டுமே தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது.
பாடவாரியாக, கணினி அறிவியலில் 3; கணினி பயன்பாடுகள் 2; வணிகவியல் 1; இயற்பியல் 1 என, ஏழு மாணவர்கள், 100க்கு 100 மதிப்பெண் பெற்றுள்ளனர்.
மதிப்பெண்கள் அடிப்படையில் புல்லா அவென்யூ பெண்கள் மேல்நிலைப் பள்ளி 600க்கு, 592 மதிப்பெண்கள் பெற்று முதலிடத்தில் உள்ளது.
அத்திப்பட்டு - 580; அயனாவரம் - 573; எம்.எச்., பெண்கள் பள்ளி - 572; நுங்கம்பாக்கம் பெண்கள் பள்ளி மற்றும் திருவான்மியூர் மேல்நிலைப் பள்ளிகள் 569 மதிப்பெண்கள் பெற்று; அடுத்தடுத்த இடங்களை பெற்றுள்ளன.
மேலும், நுங்கம்பாக்கம் பெண்கள் பள்ளி - 96.10 சதவீதம்; அப்பாசாமி மேல்நிலை - 94.74; திருவான்மியூர் - 94.61 சதவீதம்; எம்.எச்.,சாலை பெண்கள் பள்ளி - 93.36 சதவீதம்; நெசப்பாக்கம் மேல்நிலைப் பள்ளி 93.24 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன.
மதிப்பெண்கள் அடிப்படையில், 25 மாணவர்கள் 551க்கு மேல் மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். 111 மாணவர்கள், 501ல் இருந்து 550 வரை மதிப்பெண்களும், 254 மாணவர்கள் 451ல் இருந்து 500 மதிப்பெண்களும் பெற்றுள்ளனர். இந்த 2023 - 24ம் கல்வியாண்டில், சென்னை மாநகராட்சி பள்ளிகளில் படித்த மாணவர்கள், சராசரி அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
அதன்படி, 10ம் வகுப்பு பொதுத்தேர்வில், 79.11 சதவீதம்; பிளஸ் 1 பொதுத்தேர்வில் 80.08 சதவீதம்; பிளஸ் 2ல் பொதுத்தேர்வில், 87.13 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

