/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
திருட்டு வழக்குகளில் 82 பேர் கைது
/
திருட்டு வழக்குகளில் 82 பேர் கைது
ADDED : ஜூலை 05, 2024 12:25 AM
வேப்பேரி, சென்னையில் திருட்டு தொடர்பான வழக்குகளில் 82 பேரை கைது செய்த போலீசார், 62 சவரன் நகை, 37 காரட் வைரம் மற்றும் 9.45 லட்சம் ரூபாயை திருடர்களிடம் பறிமுதல் செய்து உள்ளனர்.
சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு உட்பட்ட பகுதியில் மொபைல்போன், செயின் பறிப்பு, திருட்டு உள்ளிட்ட குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டு வருவோரை போலீசார் கைது செய்து வருகின்றனர். கடந்த 14 நாட்களில், வெவ்வேறு பகுதியில் திருட்டு வழக்குகளில் தொடர்புடைய 82 பேரை, போலீசார் கைது செய்து உள்ளனர்.
அவர்களிடம் இருந்து, 62.5 சவரன் தங்க நகை, 37.618 காரட் வைரம், 19 மொபைல் போன்கள், 9.45 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்து உள்ளனர். இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்ட 11 பேரை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து 11 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்து உள்ளனர்.
நடப்பாண்டில், திருட்டு தொடர்பான குற்றங்களில் ஈடுபட்டு வந்த 126 பேர், கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோட் உத்தரவின்படி குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.