/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மெட்ரோவில் 86.65 லட்சம் பேர் பயணம்
/
மெட்ரோவில் 86.65 லட்சம் பேர் பயணம்
ADDED : மார் 02, 2025 12:54 AM
சென்னை, பயணியருக்கு சிறப்பான மெட்ரோ ரயில் சேவை வழங்குவதில் நிர்வாகம் தொடர்ந்து பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது.
அந்த வகையில், கடந்த மாதத்தில் மட்டும் 86,65,803 பேர் பயணம் செய்துள்ளனர். இதுவே, ஜன., மாதத்தில் 86,99,344 பேர் பயணம் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த மாதத்தில் அதிகபட்சமாக சிங்கார சென்னை அட்டை வாயிலாக 34,22,286 பேரும், பயண அட்டை வாயிலாக 14,80,150 பேரும், கியூ.ஆர்., டிக்கெட் வாயிலாக 18,34,474 பேரும் பயணம் செய்துள்ளனர்.
மேலும், ஒரே நாளில் அதிகபட்சமாக, கடந்த மாதம் 7ம் தேதியன்று 3,56,300 பேர் பயணம் செய்துள்ளனர்.
கியூ.ஆர்., மற்றும் சிங்கார சென்னை அட்டை வாயிலாக டிக்கெட் பெறுவோருக்கு தொடர்ந்து 20 சதவீதம் கட்டண சலுகை அளிக்கப்படுகிறது என, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.