/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மப்பேடு சரக்கு முனையத்திற்கான ரயில் பாதைக்கு 88 ஏக்கர் நிலம்
/
மப்பேடு சரக்கு முனையத்திற்கான ரயில் பாதைக்கு 88 ஏக்கர் நிலம்
மப்பேடு சரக்கு முனையத்திற்கான ரயில் பாதைக்கு 88 ஏக்கர் நிலம்
மப்பேடு சரக்கு முனையத்திற்கான ரயில் பாதைக்கு 88 ஏக்கர் நிலம்
ADDED : மார் 02, 2025 12:48 AM
சென்னை, சென்னையை சுற்றி சென்னை, எண்ணுார் காமராஜர், காட்டுப்பள்ளி அதானி துறைமுகங்கள் உள்ளன.
தமிழகத்தில் உள்ள தொழில் நிறுவனங்கள், இந்த துறைமுகங்களை பயன்படுத்தி பிற மாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் சரக்குகளை ஏற்றுமதி, இறக்குமதி செய்கின்றன.
தமிழக ஏற்றுமதி, இறக்குமதி வணிகம் வளர்ச்சி அடைந்து வருகிறது. எனவே, அதிநவீன தொழில்நுட்பம் மற்றும் கிடங்கு கட்டமைப்பு வசதிகளுடன் சரக்குகளை விரைந்து கையாள, திருவள்ளூர் மாவட்டம், மப்பேட்டில், 182 ஏக்கரில், 1,423 கோடி ரூபாயில், பல்வகை சரக்கு போக்குவரத்து பூங்கா அமைக்கப்படுகிறது.
இத்திட்டத்தை, 'டிட்கோ' எனப்படும், தமிழக அரசின் தொழில் வளர்ச்சி நிறுவனம், தேசிய நெடுஞ்சாலை சரக்கு போக்குவரத்து மேலாண்மை நிறுவனம், சென்னை துறைமுக பொறுப்பு கழகம், ரயில் விகாஸ் ஆகியவை இணைந்து துவக்கியுள்ள, 'சென்னை பல்வகை சரக்கு போக்குவரத்து பூங்கா' என்ற சிறப்பு முகமை செயல்படுத்துகிறது.
மப்பேட்டில் சேமிப்பு கிடங்கு, குளிர்பதன கிடங்கு, சரக்குகளை துரிதகதியில் 'போக்கிங்' செய்யும் வசதி, விரைந்து ஏற்றுமதி, இறக்குமதி செய்வதற்கான இயந்திரங்கள் என, அனைத்து வசதிகளும், மப்பேடு பல்வகை சரக்கு முனைய பூங்காவில் இடம்பெறும்.
மூன்று கட்டங்களாக செயல்படுத்தப்படும் திட்டத்தின் முதல் கட்ட கட்டுமான பணி துவங்கியுள்ளது. இதை, ரிலையன்ஸ் நிறுவனம் மேற்கொள்கிறது.
மப்பேடு சரக்கு முனையத்திற்கு ரயில்கள் வந்து செல்ல வேண்டும். எனவே, அங்கிருந்து, திருவள்ளூரில் ஏற்கனவே உள்ள கடம்பத்துார் ரயில் நிலையம் வரை, 15 - 20 கி.மீ., ரயில் பாதை அமைக்கப்பட உள்ளது.
இதற்காக, மப்பேடு மற்றும் சுற்றியுள்ள இடங்களில், 88 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது. இதற்கான அறிவிப்பை, டிட்கோ வெளியிட்டுள்ளது.